Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

'சர்வதேச காரணிகளால் சரிந்த தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்பு'

'சர்வதேச காரணிகளால் சரிந்த தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்பு'

தங்கம் விலை 3,800 டாலருக்கும் கீழே செல்ல வாய்ப்புள்ளதாகவும், அப்படி நடந்தால் ஒரு சவரன் ரூ.72,000 வரை குறையக்கூடும் என்றும் அமெரிக்க ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

அண்மைக்காலமாக தொடர் சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை, வரும் பண்டிகை காலங்களை முன்னிட்டு மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை இறங்குமுகமாக இருப்பதற்கான காரணங்கள் மற்றும் இனிவரும் நாட்களில் அதன் நிலவரம் குறித்து அவர் கூறியதாவது: 

அமெரிக்க வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், தங்கம் விலை 3,800 டாலருக்கும் கீழே செல்ல வாய்ப்புள்ளதாகவும், அப்படி நடந்தால் ஒரு சவரன் ரூ.72,000 வரை குறையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பீதியால், தங்கத்தை அவசரமாக விற்கும் நிலை உருவானது. இது விலை சரிவுக்கு முக்கியக் காரணம். மேலும், உலக தங்க கவுன்சில் தரவுகளின்படி, பல்வேறு நாட்டு மத்திய வங்கிகள் தங்கத்தை விற்றுள்ளன.

குறிப்பாக, ரஷ்யா தன்னிடம் இருந்த 83 டன் தங்கத்தையும், துருக்கி 44 டன் தங்கத்தையும் விற்றுள்ளன. கடந்த ஆண்டு வெறும் 6 டன் தங்கத்தை மட்டுமே விற்றிருந்த ரஷ்யா, தற்போது போர் மற்றும் பொருளாதாரப் பற்றாக்குறை காரணமாக தனது ரிசர்வ் வங்கியில் இருந்த தங்க இருப்பை விற்றுள்ளது.

இதுதவிர, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும் தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. தற்போது காணப்படுவது தற்காலிகமான விலை குறைவுதான். அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை படிப்படியாக உயரத் தொடங்கும். 

தொடர்ந்து தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகளும், விடுமுறை நாட்களும் வரவுள்ளன. இந்த காலக்கட்டங்களில் தங்கத்தின் தேவை பெருமளவு அதிகரிக்கும் என்பதால், தங்கம் விலை மீண்டும் உயர அதிக வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
புதிய டிரக் டயரை அறிமுகம் மிச்செலின் நிறுவனம்
அடுத்த செய்தி
Trump admin’s election posts criticised as inflammatory

தொடர்புடைய செய்திகள்